நடிகை சமந்தாவின் தந்தை உயிரிழப்பு

தென்னிந்திய திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவரது தந்தை ஜோசப் பிரபு சற்று முன் உயிரிழந்தார். தந்தை உயிரிழப்பு குறித்து சமந்தா தனது சமூக வலைதளத்தில் உருக்கமான பதிவை பகிர்ந்துள்ளார். அதில், “நாம் மீண்டும் சந்திக்கும் வரை அப்பா” என குறிப்பிட்டுள்ளார்.

நடிகை சமந்தா சென்னையில் ஜோசப் பிரபு – நினெட் பிரபு தம்பதிக்கு பிறந்தவர் ஆவார். இவரது தந்தை ஜோசப் பிரபு தெலுங்கு பேசும் ஆங்கிலோ இந்தியன் ஆவார். திரையுலக பயணத்திற்கு தன் தந்தை அதிகளவு ஒத்துழைப்பை கொடுத்ததாக சமந்தா பல்வேறு தருணங்களில் கூறியிருக்கிறார்.

இந்த நிலையில், சமந்தாவின் தந்தை திடீர் உயிரிழப்பு தகதவல் அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது. சமூக வலைதளங்களில் பலரும் சமந்தாவுக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். மேலும் சமந்தா தந்தை ஜோசப் பிரபுவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here