புனே:மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டத்தை சேர்ந்தவர் கமலேஷ் பாட்டில் (வயது23). இவரும், இவரது நண்பர்களான ஹேமந்த் மலாஷ்கர் (26) மற்றும் பிரபமேஷ் தரடே (22) ஆகிய 3 பேரும் கடந்த 1-ந்தேதி மாலை ஆடி காரில் சென்றனர்.
பிம்ப்ரி சின்ச்வாட் டவுன்சிப் பகுதியை அடுத்த பிஜிலி நகர் பகுதியில் கார் சென்ற போது அவ்வழியாக வந்த மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி உள்ளது. இதனால் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த ஜக்கரியா மேத்யூ என்பவர் காரை நிறுத்தி அதில் இருந்தவர்களுடன் ஏன் கவனக்குறைவாக கார் ஓட்டுகிறீர்கள் என கேட்டுள்ளார். அப்போது கமலேஷ் பாட்டில் மற்றும் அவரது நண்பர்கள் என 3 பேரும் சேர்ந்து ஜக்கரியா மேத்யூவை அடித்து தாக்கினர்.
பின்னர் மேத்யூவை கார் பேனட்டில் தூக்கி போட்டு சுமார் 3 கிலோ மீட்டருக்கு மேல் இழுத்து சென்றுள்ளனர். இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து போலீஸார் கமலேஷ் பாட்டில் உள்பட 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.