கோலாலம்பூர்:
நாட்டை உலுக்கிய ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்ட சிறுவன் ஜெய்ன் ரயாயான் அப்துல் மாட்டினின் கொலை வழக்கில், குறித்த சிறுவனின் பெற்றோருக்கு எதிராக சுமத்தப்பட்ட குழந்தை புறக்கணிப்பு குற்றச்சாட்டை மறுபரிசீலனை செய்யுமாறு கோரிய விண்ணப்பத்தை தேசிய சட்டத்துறை நிராகரித்தது.
இன்று கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் செவிமடுக்கப்பட்ட இந்த வழக்கில், நீதிபதி டாக்டர் ஷாலிசா வார்னோ முன்னிலையில் அரசு துணை வழக்கறிஞர் ராஜா ஸைசுல் ஃபரிடா ராஜா ஸஹாருடின் பாதிக்கப்பட்டவரின் பெற்றோரது விண்ணப்பம் நிராகரிக்கப்படுவதாக அறிவித்தார்.
இந்நிலையில், ஜெய்ன் ரய்யானின் பெற்றோர் தரப்பு வழக்கறிஞர் ஹரேஷ் மகாதேவன், குற்றம் சாட்டப்பட்டவர்களது கைப்பேசி, CDs ஆகிய சான்றுப்பொருட்களை தடயவியல் துறையிடம் சமர்பித்தார்.
இருப்பினும், பாதிக்கப்பட்டவரின் உடல் நிலவு குறித்த தடயவியல் அறிக்கை ஏதும் சமர்ப்பிக்கப்படவில்லை என்று அவர் கூறினார்.
இவ்வழக்கின் விசாரணை அடுத்தாண்டு பிப்ரவரி 3 முதல் 7 வரை நடைபெறும் என்றும், மீண்டும் இரண்டாம் சுற்று விசாரணை பிப்ரவரி 17 முதல் 21 மற்றும் மார்ச் 10 முதல் 14 வரை நடைபெறும்,” என்றும் அவர் மேலும் கூறினார்.