மலேசியா -சிங்கப்பூர் இடையிலான அதிவேக போக்குவரத்து இணைப்புத் திட்டத்தை இரு நாட்டு பிரதமர்களும் பார்வையிட்டனர்

ஜோகூர் பாரு:

மலேசியா -சிங்கப்பூர் இடையிலான அதிவேக போக்குவரத்து இணைப்புத் திட்டத்தின் (RTS Link)உள்கட்டமைப்பு டிசம்பர் 31 ஆம் தேதி வரை 65 விழுக்காடு முடிவடைந்துள்ளதாகவும், இது 2026 ஆம் ஆண்டு இறுதிக்குள் கட்டி முடிக்கப்படவுள்ள நிலையில், இன்று (ஜனவரி 11) பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும் சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங் ஆகியோர் RTS திட்டத்தினை நேருக் சென்று பார்வையிட்டனர்.

ஜோகூர் பாரு மற்றும் சிங்கப்பூர் இடையிலான இந்த திட்டம் கடலுக்கு மேல் மேம்பாலம் அமைப்பு மூலம் உருவாகுகின்றது.

இரண்டு முக்கிய தலைவர்களும் இந்த திட்ட தளத்தில் சந்திப்பது இதுவே முதல் முறை.

இந்த விழாவின் போது, அன்வர் மற்றும் லீ இருவரும் RTS இணைப்பை உருவாக்குவதற்கான இரு நாடுகளின் உறுதிப்பாட்டை குறிப்பிடும் இரண்டு பலகைகளில் கையெழுத்திட்டனர்.

மேலும் இந்த நிலழ்வில் போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் மற்றும் சிங்கப்பூர் இடைக்கால போக்குவரத்து அமைச்சர் சீ ஹாங் டாட் மற்றும் ஜோகூர் மந்திரி பெசார் டத்தோ ஒன் ஹபீஸ் காசி ஆகியோர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here