எம்.எஸ்.யு. பல்கலைக்கழகத்தின் 34ஆவது பட்டமளிப்பு விழா

 எம்.எஸ்.யு. அறிவியல் நிர்வாகப் பல்கலைக்கழகத்தின் 34ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் 126 வகையான துறைகளில் சிறந்த அடைவு நிலையைப் பெற்ற மொத்தம் 2,447 மாணவர்கள் தாங்கள் பயின்ற துறைகளில் சிறந்த பட்டதாரிகளாக அங்கீகரிக்கப்பட்டனர். அண்மையில் சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகத்தின் டேவான் சான்சலர் மண்டபத்தில் இரண்டு நாள் விழாவாகவும் நான்கு அமர்வுக் கூட்டங்களாகவும் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் 35 மாணவர்கள் தத்துவம், வேதாந்த ஆய்வுத்துறையில் பட்டம் பெற்றதுடன் 65 மாணவர்கள் முதுகலைப் பட்டதாரிகளாகவும் 1,596 பேர் இளங்கலைப் பட்டதாரிகளாகவும் அங்கீகரிக்கப்பட்ட வேளையில் 751 மாணவர்கள் தகுதி அடிப்படையில் பட்டயச் சான்றிழ்களையும் பத்திரங்களையும் பெற்றனர்.

குறிப்பாக மருத்துவத்துறையில் அதிகமான இந்திய மாணவர்கள் பட்டதாரிகளாக விளங்கிய இவ்விழாவை மேன்மை தங்கிய ராஜா மூடா கெடா தெங்கு ஷராஃபுடின் பட்லிஷா இப்னி அல்-அமினுல் கரிம் சுல்தான் சலேஹுடின் அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார். எம்எஸ்யு பல்கலைக்கழகத்தின் தலைவர் பேராசிரியர் டான்ஸ்ரீ டத்தோ வீரா டாக்டர் முகமட் ஷுக்ரி அப்துல் யாஜிட், துணை வேந்தர் பேராசிரியர் புவான்ஸ்ரீ டத்தோ டாக்டர் ஜுனாய்னா அப்துல் ஹமிட் உட்பட அப்பல்கலைக்கழகத்தின் உறுப்பினர்களும் நிர்வாகத்தினரும் இவ்விழாவில் கலந்து சிறப்பித்தனர்.


மருத்துவத்துறையில் பட்டம் பெற்ற ஜோகூர், ஸ்கூடாயைச் சேர்ந்த தினேஸ்வரன் நடேசன் தனது குடும்ப உறுப்பினர்களுடன்.

 

 

மருத்துவத்துறையில் பட்டம் பெற்ற ராணி தீபாஸ்ரீ லோகேஸ்வரன்

 


உடற்கூறு ஆய்வுத்துறையில் பட்டம் பெற்ற சிரம்பான், கோலா சாவாவைச் சேர்ந்த தினேஷ்குமார் சந்திரசேகரன் தன் குடும்ப உறுப்பினர்களுடன்

 

ஜோகூர், கூலாயைச் சேர்ந்த மருத்துவப் பட்டதாரி ரெஷினா ரெவிலதா தன் பாட்டி, குடும்பத்தாருடன்

 

 

சிரம்பானைச் சேர்ந்த மருத்துவப் பட்டதாரி ஷர்மினி தன் பெற்றோர் கண்ணன் – சித்ரா தம்பதியுடன் ( ஊட்டி ரெஸ்டாரன் உரிமையாளர்)

 

 


ரவாங்கைச் சேர்ந்த மருத்துவப் பட்டதாரிகளான பாரதி விஜயன், சுபாஷினி மாரியப்பா இருவரும் தங்களின் குடும்ப உறுப்பினர்களுடன்.

 

 

மருத்து வத்துறையில் பட்டம் பெற்ற பரமேஸ்வரி கே.என்.வையாபுரி. இவர் ஜோகூர், ஸ்கூடாயைச் சேர்ந்தவர்.

 

 

ரவாங்கைச் சேர்ந்த மருத்துவப் பட்டதாரி அஷ்வினிதா ரவிச்சந்திரன்

 

 

 

உயிரியல் மருத்துவத் துறையில் பட்டம் பெற்ற ஸ்டெப்னி தமிழ்மணி தன் பெற்றோர் அர்ஜூன் – ஃபுளோரா தம்பதியுடன்

 

 

செய்தி: கே.வி.சுதன், படங்கள்: தி.மோகன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here