ஒரிஜினல் பினாங்கு காயு நாசி கண்டார் தனது 50ஆவது ஆண்டு நிறைவினை 5,000 பொதுமக்கள் புரை சூழ கொண்டாடியது. இந்த பொன்விழாவிற்கு சிலாங்கூர் அரசியார் தெங்கு பெர்மைசூரி ஹஜ்ஜா நோராஷிகின் சிறப்பு வருகை மகுடம் சூடும் வகையில் அமைந்திருந்ததாக ஒரிஜினல் பினாங்கு காயு நாசி கண்டார் ஹாஜி புர்ஹான் முஹம்மது தெரிவித்தார்.
50 ஆண்டுகளுக்கு முன் உணவகம் ஆரம்பித்த இடத்தில் பொன்விழாவினைக் கொண்டாடிய ஒரிஜினல் பினாங்கு காயு நாசி கண்டார் உணவகம் நாடு முழுவதும் பிரசித்தி பெற்றது என்றால் அது மிகையாகாது.
50 ஆண்டுகள் தங்களுக்கு ஆதரவு வழங்கிய பொதுமக்களுக்கு நன்றி நல்கும் வகையில் பொன்விழாவிற்கு வந்தவர்களுக்கு இலவசமாக நாசி கண்டார் வழங்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
பொன்விழாவில் சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி, போலீஸ் படை துணைத் தலைவர் டத்தோஸ்ரீ அயோப் கான், சிலங்கூர் மாநில போலிஸ் படைத் தலைவர் டத்தோ ஹுசைன் உமர் கான், டத்தோ வீரா ஷாகுல், எஸ் எம் எஸ் டீன் குழுமத் தலைவர் டத்தோ சிராஜுதீன், லோட்டஸ் குழுமத் தலைவர் டான்ஸ்ரீ துரைசிங்கம், பிரெஸ்மா தலைவர் டத்தோ ஜவஹர் அலி உள்ளிட்ட பல முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.












