மலேசிய தேசியக் கொடியை பறக்க விடுவது தேசிய ஒற்றுமையை மேம்படுத்துவதற்கான ஒரு வழியாகும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
இன்று ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 16) இங்குள்ள மேரு ராயாவில் உள்ள சுல்தான் அஸ்லான் ஷா ரவுண்டானாவில் தேசிய மாதம் மற்றும் ஃப்ளை ஜலோர் ஜெமிலாங் 2023 கொண்டாட்டங்களை தொடங்கிவைத்து, துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ ஃபாடில்லா யூசோப் வாசித்த பிரதமரின் உரையில் இதனை தெரிவித்தார்.
கொடியை பறக்கவிடுவதன் மூலம் நாட்டின் மீதான அன்பு, ஒற்றுமை உணர்வை மேம்படுகிறது என்று பிரதமர் அந்த உரையில் தெரிவித்ததாக அவர் கூறினார்.
அத்தோடு மலேசியர்கள் அனைவரும் ஒற்றுமையைக் கொண்டிருப்பது நாட்டிற்கு ஒரு முக்கியமான சொத்து என்று அன்வார் கூறினார்.
“எனவே, மலேசியாவின் சுதந்திரம் தொடர்ந்து பாதுகாக்கப்படுவதற்கு, ஒற்றுமை உணர்வு வளர்க்கப்பட்டு பாதுகாக்கப்பட வேண்டும் என்றார் பிரதமர்.








