குடியிருப்பு கழிவறை குழாய்க்குள் 6 மாத கரு.. வாடகைக்கு இருக்கும் 9 வீட்டாருக்கும் டிஎன்ஏ பரிசோதனை

உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் குடியிருப்பு ஒன்றின் கழிப்பறைக் குழாயிலிருந்து 6 மாத கரு கண்டுபிடிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

இந்திரபுரம் பகுதியில் உள்ள அந்த குடியிருப்பின் உரிமையாளர் தேவேந்திரன் நேற்று காலையில் தண்ணீர் தேங்கியதால் குழாய் கழன்று விழுந்ததாகவும் குழாயின் உள்ளே கரு சிக்கியிருந்ததைப் பார்த்து குழாயை அறுத்து கருவை வெளியே எடுத்ததாகவும் போலீசிடம் தெரிவித்துள்ளார். தகவலின் பேரில் இந்திரபுரம் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தியுள்ளனர்.

தனது குடியிருப்பில் உள்ள வீடுகளில் ஒன்பது பேர் வாடகைக்கு வசித்து வருவதாக உரிமையாளர் காவல்துறையிடம் தெரிவித்தார்.தொடர்ந்து அவர்கள் அனைவரையும் போலீஸார் விசாரணைக்கு உட்படுத்தப்படுத்தி வருகின்றனர். குழாயிலிருந்து மீட்கப்பட்ட 6 மாத கரு பாதுகாக்கப்பாக வைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

அங்கு வசித்து வரும் 9 வீட்டாரின் டிஎன்ஏ மற்றும் ஓனர் தேவேந்திரன் டிஎன்ஏ, கருவில் உள்ள டிஎன்ஏ உடன் ஒப்பீடு செய்யப்பட்டு, அது யாருடன் பொருந்துகிறது என்று ஆராய உள்ளதாக இந்திரபுரம் காவல் உதவி ஆணையர் சுவதந்திர குமார் சிங் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here