டெல்லி பெண்களுக்கு மாதம் ரூ. 2,100: அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடி அறிவிப்பு

டெல்லி மாநிலத்தில் அடுத்த மாதம் தொடக்கத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. தேர்தலுக்கான தேதி எப்போது வேண்டுமென்றாலும் அறிவிக்கப்படலாம்.

3-வது முறையாக ஆட்சியை பிடிக்க ஆம் ஆத்மி கட்சி தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் தற்போதில் இருந்தே பணிகளை தொடங்கிவிட்டார். 70 தொகுகளில் 31 தொகுதிகளுக்கு ஏற்கனவே வேட்பாளர்களை அறிவித்துவிட்டார்.இந்த நிலையில் டெல்லி தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றால் 18 வயது நிரம்பிய ஒவ்வொரு பெண்களுக்கும் மாதந்தோறும் தலா 2100 ரூபாய் வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

இதற்கான பதிவு நாளையில் இருந்து தொடங்குகிறது. ஆனால், உடனடியாக பணம் டெபாசிட் ஆகாது. தேர்தல் தேதி அடுத்த 10 முதல் 15 நாட்களில் அறிவிக்கப்படும். இதனால் தேர்தலுக்குப் பிறகு டெபாசிட் செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகையில் “நான் முன்னதாக ஒவ்வொரு பெண்களுக்கும் ஆயிரம் ரூபாய் வழங்குவதாக கூறியிருந்தேன். ஆனால் சில பெண்கள் என்னிடம் வந்து, தற்போதைய விலைவாசி ஏற்றத்தில் ஆயிரம் ரூபாய் போதாது என்றனர். இதனால், அனைத்து பெண்களுக்கும் 2100 ரூபாய் டெபாசிட் செய்யப்படும்” என்றார்.

இன்று காலை முதலமைச்சர் அதிஷி தலைமையிலான கேபினட்டில் இந்த பரிந்துரைக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இந்த திட்டம் அமல்படுத்தப்படும்.முக்கியமந்திரி சம்மன் யோஜ்னா (Mukhyamantri Samman Yojna) திட்டத்தின் கீழ் 18 வயது நிரம்பிய ஒவ்வொரு பெண்களுக்கும் தலா 1000 ரூபாய் வழங்கப்படும் என கடந்த மார்ச் மாதம் கெஜ்ரிவால் தலைமையிலான அரசு அறிவித்திருந்தது.

இது ஒரு வரப்பிரசாதமாக இருக்கும். மாத நிதியில் இருந்து தாய்மார்கள் மற்றும் சகோதரிகள் ஆகியோர்களால் இந்த திட்டம் பாராட்டப்படும் என கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here