ரீல்ஸ் மோகம்.. ஓடும் ரெயிலில் இருந்து கீழே விழுந்த சீன பெண்.. அதிர்ச்சி வீடியோ

சீனாவை சேர்ந்த பெண் ஒருவர் இலங்கைக்கு சுற்றுலா சென்றுள்ளார். அப்போது ரெயிலில் பயணிக்கும்போது அப்பெண் ரெயிலுக்கு வெளியே தலையை நீட்டி ஆபத்தான முறையில் ரீல்ஸ் எடுத்துள்ளார். அந்த சமயத்தில் ஒரு மரத்தில் மோதி அப்பெண் கீழே விழுந்துள்ளார்.

ஆனால் அதிர்ஷ்டவசமாக அப்பெண் ஒரு புதருக்குள் விழுந்ததால் காயமின்றி உயிர் தப்பினார்.சமீப காலங்களில் ஆபத்தான முறையில் ரீல்ஸ் வீடியோ எடுக்கும் பழக்கம் அதிகரித்துள்ளது. இதன் விளைவாக பலரும் உயிரிழந்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here