ஈப்போ: சித்தியவானில் உள்ள ஒரு சூராவைச் சுற்றியுள்ள பகுதியை சுத்தம் செய்து கொண்டிருந்த ஒருவர், கட்டிடத்தின் பின்னால் உள்ள புதர்களில் ஒரு குழந்தை அழுது கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். சனிக்கிழமை (டிசம்பர் 14) மாலை 6.45 மணியளவில் இந்த சம்பவம் தொடர்பாக பொதுமக்களிடமிருந்து காவல்துறைக்கு அழைப்பு வந்ததாக மஞ்சோங் மாவட்ட காவல்துறைத்தலைவர் உதவி ஆணையர் ஹஸ்புல்லா அப்துல் ரஹ்மான் தெரிவித்தார்.
பெர்மாத்தாங் கிராம சூராவுக்குப் பின்னால் உள்ள புதரில் குழந்தை துணியால் சுற்றப்பட்டிருந்த நிலையில் காணப்பட்டதாக போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. சுற்றுப்புற பகுதியை சுத்தம் செய்ய வந்த சூராவ் குழு உறுப்பினர் ஒருவர் குழந்தையின் அழுகை சத்தத்தைக் கேட்டார். சத்தத்தைத் தொடர்ந்து, ஒரு குழந்தையைக் கண்டு அதிர்ச்சியடைந்தார் என்று அவர் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 15) ஒரு அறிக்கையில் தெரிவித்தார். குழந்தை மேலதிக சிகிச்சைக்காக ஸ்ரீ மஞ்சோங் மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக ஹஸ்புல்லா தெரிவித்தார். இந்த வழக்கு தண்டனைச் சட்டத்தின் பிரிவு 317 இன் கீழ் விசாரிக்கப்படுகிறது.
விசாரணைகள் நடந்து வருகின்றன. மேலும் குழந்தையின் தாயாரை நாங்கள் தேடி வருகிறோம். இந்த வழக்கு குறித்த தகவல் தெரிந்தவர்கள், விசாரணை அதிகாரியான இன்ஸ்பெக்டர் நூர் முனாவரா அகமதுவை 011-1624 0391 என்ற எண்ணிலும், மஞ்சோங் மாவட்ட காவல் தலைமையகத்தை 05-688 6222 என்ற எண்ணிலும் அல்லது 014-682 8005 என்ற வாட்ஸ்அப் ஹாட்லைன் மூலமாகவும் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.