134 ஆண்டுகள் பழைமை வாய்ந்த மாச்சாப் ஸ்ரீ மகா கருமாரியம்மன் கருப்பர் ஆலய வருடாந்திரா திருவிழா எதிர் வரும் 20,21 22 டிசம்பர் வெள்ளி ,சனி ஞாயிறு ஆகிய மூன்று தினங்களில் கோலாகலமாக நடைபெறவுள்ளது.
மலாக்கா ஆயேர்குரோ டோல் சாவடியிலிருந்து சுமார் 10 கிமீ தூரத்தில் இயற்கை எழில் கொஞ்சும் ,பச்சைப் பசுமையான பறந்து விரிந்த செம்பனை தோட்டத்தின் மத்தியில் 30 அடி உயரத்தில் 18ஆம் படி கருப்பு சாமி நின்ற கோலத்தில் தலையில் பெரிய தலைப்பாகை, நெற்றியில் திருமண், மிரட்டும் விழிகள், முறுக்கிய மீசை ஓங்கிய கையில் வீச்சரிவாள், மறு கையில் ஈட்டி, சங்கு முழங்காலுக்கும் கீழே வருமளவில் இடுப்பில் கச்சை ஆகியவற்றோடு பிரமாண்டமான தோற்றத்துடன் இன்னல்களை போக்கும் காவல் தெய்வமாய் இங்கு அருள் காட்சி தருகிறார்.
தன்னை தேடி வரும் பக்தர்களின் கண்ணீரைப் போக்கும் வல்லமை கொண்ட கருப்பர் சுமாமி, கருமாரி அம்பிகையிடம் ஆசிப் பெற்றுச் செல்ல உள்ளூர் , வெளி மாநிலங்கள்,மற்றும் அண்டை நாடான சீங்கப்பூரிலிருந்தும் அதிகமான பக்தர்கள் நாள் தோரும் வருகை தருகின்றனர். அமரர் சின்னகண்ணு-கந்தசாமி, அவர்களால் 1890 ஆம் ஆண்டு சிரியதாக தோற்றுவிக்கப்பட்டு பராமரிக்கப்பட்ட இவ்வாலயம் பிறகு அமரர் முனுசாமி கவனித்து வந்தார் , தற்பொழுது அவர்களது குடும்ப வாரிசாக விளங்கும் மு. குமரன், மு.அன்பழகன், மு.கேசவன் ஆகிய முன்று சகோதர்கள் ஆலயத்தை மறுசீரமைப்பு செய்து மிக சிறப்பான முறையில் ஆலயத்தை வழி நடத்தி வருவதோடு இவ்வாலயம் ஆன்மிக மையமாக மட்டுமின்றி கல்வி சமூக ,சமுதாயம் சேவைகளுக்கு முக்கியத்துவம் வழங்கி வருகின்றனர்.
இந்துச் சமய ஆகம வேத முறைகளுடன் இவ்வாலய பூஜைகள் சைவ சமயத்திற்கு உற்பட்டு நடைபெற்று வருகிறது . இவ்வாலயத்திற்கு வந்து பிரார்த்தனையை முன் வைத்துச் செல்லும் பல பக்தர்கள் மிண்டும் வந்து தங்கள் நேர்த்திக் கடனை கருப்பருக்குச் செழுத்தி விட்டுச் செல்வது கண் கூடான உண்மையாக திகழ்கிறது.20.12.2024 வெள்ளிக்கிழமை மாலை 5.30 தொடங்கி கருப்பருக்கு மஹா யாகம் சங்காபிஷேகம், மஹா அபிஷேகத்தின் சிறப்பு பூஜைகள் இரவு 9.00 மணி வரை நடைபெறும். உலக அமைதிக்காகவும் , பில்லி சூனியம் , குடும்ப பிரச்சனை, வேலையில் சிக்கல், நோய் பினி ஆகிய ,புத்திரபாக்கியம் இல்லாமை போன்ற பல இன்னல்களிலிருந்து விடுப்பட்டு மனதில் நிம்மதியும் வாழ்வில் சந்தோஷமும் பெற பக்தர்கள் இந்த யாகத்தில் கலந்துக் கொள்கின்றனர். மஹா வல்லமை பொருந்திய இந்த யாகத்தில் பங்குக் கொள்வதில் வழி கண் கண்ட தெய்வமாக விளங்கும் 18 ஆம்படி கருப்புசாமி மக்களின் இடர்களை தீர்ப்பார் என்று நம்பபடுகிறது.
21.12.2024 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு சங்காபிஷேகம், மாலை 6.00 மணிக்கு ஆலய நித்திய பூஜையுடன் ஆற்றங்கரையிலிருந்து சக்தி கரகம் பாலித்தல் நிகழ்வும் நடைபெறும். அன்றிரவு மேடை கலை நிகழ்ச்சிகளும் ஏற்பாடுச் செய்யப்பட்டுள்ளது.22.12.2024 திருவிழா அன்று காலை 6.00 மணிக்கு நித்திய பூஜை தொடங்கும். 7.30 மணி தொடக்கம் பால் குடங்கள், அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று பிற்பகல் 1.00 மணிக்கு தீமீதி திருவிழா நடைபெறும்.
பிற்பகல் 3.00 மணிக்கு திஎச் ஆர் புகழ் கவிமாறன் ஆலய அதிர்ஷ்ட குழுக்கல் நிகழ்ச்சியை நடத்தி வைப்பார். இரவு 7.00 மணிக்கு மேல் அம்பாள் அழகிய வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட இரத்தில் மாச்சாப் தோட்டத்திலிருந்து புறப்பட்டு அருகில் இருக்கும் குடியிருப்புப் பகுதிகளுக்கு ஊர்வலம் சென்று பக்தர்களுக்கு அருள் காட்சி தருவாள்.
சுற்று வட்டார மக்கள் , நாடு தழுவிய உள்ள் பக்தர்கள் ஆலயத் திருவிழாவில் கலந்துக் கொள்ளுமாறு ஆலய நிர்வாகம் கேட்டுக் கொள்கிறது. 016-6452422 குமரன், 016 6392242, 012 -3012242