ஜார்ஜ்டவுன்:
கோவிட்-19 கிருமித்தொற்று குறித்து மலேசியர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
குறிப்பாக, பள்ளி விடுமுறை நெருங்குகையில் கிருமிப் பரவல் அபாயம் அதிகம் இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எனவே அதிகமானோர் ஒன்றுகூடும் இடங்களில் கோவிட்-19 கிருமி பரவல் அதிகரிக்கக்கூடும் என்று கிருமியியல் நிபுணர் குமுதா தேவதாஸ் கூறினார்.
“தாய்லாந்தில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சொங்க்ரான் விழாவில் பலர் கலந்துகொண்டனர். அதையடுத்து, கோவிட்-19 கிருமித்தொற்று அதிகரித்தது. ஆனால் இந்த JN1 கிருமிவகை சிறிது காலமாகவே பரவி வருகிறது. எனவே, பள்ளி விடுமுறையின்போது கிருமித்தொற்று திடீரென்று பேரளவில் ஏற்றம் காணாது,” என்றார் டாக்டர் குமுதா.
மலேசியாவில் மே 29ஆம் தேதியிலிருந்து ஜூன் 9ஆம் தேதி வரை பள்ளி விடுமுறை ஆரம்பமாகிறது. இருப்பினும் நிலைமை சமாளிக்க முடியாத அளவுக்குச் செல்லாது என்று நம்பிக்கை தெரிவித்தார்.
சிங்கப்பூர் உட்பட மலேசியாவின் அண்டை நாடுகளில் JN1 கிருமிவகையுடன் தொடர்புடைய கிருமிகளால் நோய்ப் பரவல் அதிகரித்திருப்பதாக அவர் கூறினார்.




















