(ப.ஹரிதரன்)
மூவார், மே 19 – 2026 ஜொகூர் சுற்றுலா ஆண்டை மெருகூட்டும் வகையில், முவார் மாவட்டத் துறையும் ஜொகூர் சுற்றுலா வாரியமும் இணைந்து “JOM JELAJAH MUO” ஊக்குவிப்பு விழாவை நடத்தினர்.இந்நிகழ்வில் ஜொகூர் மாநில அளவிலான ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டனர்.
ஏற்பாட்டுக்குழுவினர்களின் வழங்கிய தகவல்களின்படி, “மூவார் டூர்” தொடர்பான நடவடிக்கைகளுக்கு ஊடகங்களைப் பயன்படுத்துவதில் கவனம் செலுத்தவிருப்பதாகவும், மூவாரின் சரித்திர கதைகள், புகைப்படங்கள் மற்றும் அனுபவங்களை ஊடகங்களின் முதல் கண்ணோட்டத்தில் பகிர்ந்து கொள்ளவும், உள்ளூர் சுற்றுலாவுக்கு புதிய உயிர்ச்சக்தியை செலுத்தவும், அதிக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கவும் பெரும் பங்காற்ற முடியும் என நம்பிக்கை தெரிவித்தனர்.
இரண்டு நாள், ஒரு இரவு ஊடக சுற்றுப்பயணத்தில் கோல்டன் மூவார் நதியில் பயணம், சதுப்புநிலக் காடுகளை ஆராய்வது, மூவார் பழைமை 434 காப்பிக் கடையில் காபி குடித்தல், மீ பாண்டுங்கை ருசித்தது, வரலாற்று சிறப்புமிக்க சுல்தான் இப்ராஹிம் மசூதியைப் பார்வையிடல் போன்ற அங்கங்கள் இடம் பெற்றன.