சக நண்பர்களால் தாக்கப்பட்டு காயமடைந்த பல்கலைக்கழக மாணவர்

மூன்று நண்பர்களால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் பேராக்கில் உள்ள யுனிவர்சிட்டி டெக்னாலஜி மாரா (யுஐடிஎம்) ஶ்ரீ இஸ்கந்தர் மாணவர் ஒருவர் காயமடைந்ததாக காவல்துறை கூறுகிறது. 18 வயது மாணவரின் முகம், கைகள் மற்றும் வயிற்றில் காயங்கள் ஏற்பட்டுள்ளதாக பேராக் தெங்கா காவல்துறைத் தலைவர் ஹஃபீசுல் ஹெல்மி ஹம்சா தெரிவித்ததாக ஹரியான் மெட்ரோ தெரிவித்துள்ளது.

மாணவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவரின் தந்தை செவ்வாய்க்கிழமை மாலை போலீசில் புகார் அளித்ததை அடுத்து, 18 மற்றும் 20 வயதுடைய மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக ஹஃபீசுல் கூறினார்.

விசாரணைக்கு உதவுவதற்காக சந்தேகநபர்கள் மூன்று நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டு இன்று போலீஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர் என்று அவர் கூறினார். இந்தச் சம்பவம் ஹாஸ்டல் அறையில் பாதிக்கப்பட்டவருக்கும் சந்தேக நபர்களுக்கும் இடையே ஏற்பட்ட தவறான புரிதல் மற்றும் தூண்டுதலால் உருவானது.

குற்றவியல் சட்டம் பிரிவு 147இன் கீழ் கலவரம் செய்ததற்காக வழக்கு விசாரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here