தடைசெய்யப்பட்ட பகுதியில் புகைபிடித்ததற்காக டத்தோஸ்ரீ முகமட் ஹசானுக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை செலுத்தியுள்ளார். சிரம்பான் மாவட்ட சுகாதார அதிகாரியிடமிருந்து நோட்டீஸைப் பெற்ற ஒரு நாளுக்குப் பிறகு தான் அபராதத் தொகையை செலுத்தியதை வெளியுறவு அமைச்சர் சனிக்கிழமை (டிசம்பர் 21) உறுதிப்படுத்தினார்.
கடந்த வாரம், தடைசெய்யப்பட்ட பகுதியில் முகமது புகைப்பிடிக்கும் புகைப்படம் வைரலானது. இதற்கு பதிலளித்த சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஸூல்கிப்ளி அமாட், சுகாதார அதிகாரிகள் முகமட் ஹசானுக்கு சந்தித்து சம்மன் வழங்குவார்கள் என்றார். இந்த சம்பவத்திற்கு முகமட் ஹசானுக்கு மன்னிப்பும் கோரியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.