அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானங்கள் திடீர் தரையிறக்கம் – அமெரிக்காவில் பரபரப்பு

வாஷிங்டன்:அமெரிக்காவின் முன்னணி விமான நிறுவனமாக அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த விமானத்தில் தினமும் ஆயிரக்கணக்கானோர் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தயாராகி வரும் நிலையில், மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல விமானங்களை அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர். அமெரிக்காவில் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமான சேவையை மக்கள் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர்.இதற்கிடையே, அமெரிக்கா முழுவதும் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானங்கள் இன்று திடீரென தரையிறக்கப்பட்டன.

விமான நிறுவனத்தின் கட்டுப்பாட்டு மையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த விமானங்கள் நாடு முழுவதும் தரையிறக்கப்பட்டன. இதனால் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்குச் செல்ல திட்டமிட்டிருந்த மக்கள் கடும் அவதிப்பட்டனர்.

இந்நிலையில், தொழில்நுட்ப கோளாறு சரிசெய்யப்பட்டதையடுத்து சுமார் 2மணி நேரத்துக்கு பின் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவன விமானங்கள் மீண்டும் சேவையை தொடங்கின.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here