சிரம்பான்:
நாட்டில் இயக்கச் செலவுகள் அதிகரித்துள்ள போதிலும், பள்ளி பேருந்து கட்டணத்தை உயர்த்தும் திட்டம் இல்லை என்று மலேசியா பள்ளி பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் சங்கம் (GPBSM) தெரிவித்துள்ளது.
இந்த சேவைகளை நம்பியிருக்கும் பெற்றோருக்கு நிதிச்சுமையை ஏற்படுத்தும் என்பதை GPBSM சங்கம் ஒப்புக்கொள்கிறது என்றும், எனவே அடுத்த பள்ளி அமர்வுக்கு பள்ளி பேருந்து கட்டணத்தை மறுபரிசீலனை செய்யவோ அல்லது உயர்த்தவோ எங்களுக்கு எந்த திட்டமும் இல்லை என்று அதன் தலைவர், முஹமட் ரோபிக் முஹமட் யூசுப் கூறினார்.