புத்ராஜெயா: பொது சேவை ஊதிய முறையின் (எஸ்எஸ்பிஏ) சம்பள உயர்வைத் தொடர்ந்து, அதிகப்படியான அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கடன்களை வாங்க வேண்டாம் என்று கியூபெக்ஸ் அரசு ஊழியர்களுக்கு நினைவூட்டியுள்ளது. அதன் பொதுச்செயலாளர் அப்துல் ரஹ்மான் நோர்டின், கடனை பெறுவதற்கு SSPA ஒரு சாக்காகப் பயன்படுத்தப்படக்கூடாது. இது இறுதியில் நிதி நெருக்கடிக்கு வழிவகுக்கும் என்றார்.
கடன்கள் தேவைப்பட்டால், அவை வீட்டு வசதி அல்லது குழந்தைகளின் கல்வி போன்ற எதிர்கால ஆதாயங்களுக்காக மட்டுமே இருக்க வேண்டும். மொபைல் போன் வாங்குவதற்கு அல்ல. இன்று பெர்னாமா தொலைக்காட்சியில் அவர் கூறுகையில், அரசு ஊழியர்கள் நிதி ரீதியாக சுமைகளை சந்திக்க நேரிடும் அபாயம் உள்ளது.
ஏறக்குறைய 12 ஆண்டுகளாக அரசு ஊழியர்களின் சம்பளம் மறுஆய்வு செய்யப்படாததால் SSPA நடைமுறைப்படுத்தப்படுவது சரியான நேரத்தில் இருந்ததாகவும் ரஹ்மான் கூறினார். எஸ்எஸ்பிஏ சலுகையை நிராகரித்த 1,400 அரசு ஊழியர்களின் முடிவை கியூபெக்ஸ் மதிப்பதாகவும் அவர் கூறினார்.