பாட்டி, அத்தை உள்ளிட்டோரின் ஆபாச படங்கள், வீடியோக்களை எடுத்த இளைஞருக்கு சிறை, அபராதம்

தனது பாட்டி உட்பட தனது குடும்ப உறுப்பினர்களின் மோசமான வீடியோக்களை பதிவு செய்ததற்காக 23 வயது இளைஞருக்கு நான்கு நாட்கள் சிறைத்தண்டனையும் 4,000 ரிங்கிட் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. குற்றவியல் சட்டத்தின் 292ஆவது பிரிவின் கீழ் உள்ள குற்றச்சாட்டை பத்து பஹாட் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் சுஹைலா ஷஃபியுதின் முன் வாசிக்கப்பட்டதையடுத்து,  ஃபஸ்லி இசா குற்றத்தை ஒப்புக்கொண்டார் என்று பெரித்தா ஹரியான் தெரிவித்தது.

டிசம்பர் 23 அன்று இரவு 11.15 மணியளவில் பத்து பஹாட்டின் ஸ்ரீ மேடனில் உள்ள ஒரு வீட்டில் தனது கைபேசியில் மோசமான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை வைத்திருந்ததாக செம்பனை தோட்டத் தொழிலாளி மீது குற்றம் சாட்டப்பட்டது. வழக்கின் உண்மைகளின்படி, குற்றவாளி பயன்படுத்திய இணைய இணைப்பு குறித்து மலேசிய தகவல் தொடர்பு மற்றும் மல்டிமீடியா கமிஷன் (எம்சிஎம்சி) காவல்துறைக்கு தகவல் கொடுத்தது. அது அவர் பதிவு செய்த ஆபாசமான விஷயத்துடன் தொடர்புடையது.

பின்னர் போலீசார் ஃபஸ்லியின் வீட்டில் சோதனை நடத்தினர். அங்கு அவர் மற்ற குடும்ப உறுப்பினர்களுடன் தங்கியிருந்தார். மேலும் அவரது தொலைபேசியை பறிமுதல் செய்து சோதனை செய்தபோது அவர் எடுத்த பல படங்கள் மற்றும் வீடியோக்கள் எடுத்திருப்பது தெரியவந்தது. அப்போது அவர் படங்கள் மற்றும் வீடியோக்கள் தனது பாட்டி, அத்தை மற்றும் உறவினர்களின் புகைப்படங்கள் என்று ஒப்புக்கொண்டார். அவர்கள் குளித்துக்கொண்டிருக்கும் போது அல்லது தங்கள் அறைகளில் உடை மாற்றும் போது அவர் வீடியோக்கள் மற்றும் படங்களை எடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here