அம்பு எய்து நாய்க் குட்டியை கொல்வதா? மனிதம் வரண்டுவிட்டதா?

கோலாலம்பூர்:

தவறான பாதையில் நுழைந்ததற்காக ஒரு நாய் அம்பு எய்து கொல்லப்பட்டது. ஈப்போவில் இக்கொடூரச் சம்பவம் தற்போது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

பேராக், செலாமாவில் உள்ள ஒரு தோட்டத்தில் கடந்த டிசம்பர் 22 ஆம் தேதி இச்சம்பவம் நிகழ்ந்தது.

அம்பு எய்தப்பட்டதில் குட்டி என்ற அந்த நாய் கடுமையான காயங்களுடன் உயிர் நீத்தது என்று மலேசிய தெரு விலங்குகள் பாதுகாப்பு சங்கத்தின் தேசியத் தலைவர் ஆர்.கலைவாணன் குறிப்பிட்டார்.

இக்கொடூரச் செயலால் குட்டி இறந்திருக்கிறது. இதன் தொடர்பான போலீஸ் விசாரணையில் சங்கம் தன்னால் இயன்ற எல்லா ஒத்துழைப்புகளையும் வழங்கும் என்று அவர் சொன்னார்.

இச்சம்பவம் 2015 மிருக நலச் சட்டத்தை அப்பட்டமாக மீறுவதாக உள்ளது. மனித நேயத்தின் அடிப்படை கொள்கைகளுக்கு மிகப் பெரிய சவாலாகவே மாறிவருகிறது என்றும் கலைவாணன் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here