ஜோகூர்:
ஜோகூர் மாநகர் மன்றம் (MBJB) 2025 ஆண்டில் 1,000 தெரு நாய்களுக்கு கருத்தடை செய்வதற்கு திட்டமிட்டுள்ளது என்று மேயர் டத்தோ முகமட் நூர் அஸாம் ஓஸ்மான் கூறினார்.
இத்திட்டத்தின் இரண்டாம் கட்டம் ஜனவரி 7 ஆம் தேதி தொடங்கி அடுத்த ஆண்டு 8 ஆம் தேதி வரை அமலில் இருக்கும். இக்காலக்கட்டத்தில் 310 நாய்களுக்கு கருத்தடை செய்யப்படும் என்று அவர் சொன்னார்.
இவ்வாண்டு அக்டோபர் 29 முதல் 30ஆம் தேதி வரை மேற்கொள்ளப்பட்ட முதல் சுற்றில் 219 நாய்களுக்கு வெற்றிகரமாக கருத்தடை செய்யப்பட்டது.
அடுத்த ஆண்டு ஒவ்வொரு காலாண்டிலும் இக்கருத்தடை நடவடிக்கையை மேற்கொள்வதற்கு MBJB திட்டமிட்டுள்ளது என்று டத்தோ முகமட் நூர் அஸாம் குறிப்பிட்டார்.
இன்று டிசம்பர் 30 ஆம் தேதி நடைபெற்ற MBJB கவுன்சில் கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இவ்வாண்டு பெறப்பட்ட 616 புகார்களின் அடிப்படையில் ஜனவரியில் இருந்து நவம்பர் வரை 2,692 தெருநாய்கள் வளைத்து பிடிக்கப்பட்டன என்றார்.