கோல திரெங்கானு:
இல்லாத டெண்டர் ஒப்பந்தம் மூலம் திரெங்கானுவை சேர்ந்த ஒரு பெண் வர்த்தகர் RM252,150 ஐ இழந்துள்ளார்.
பாதிக்கப்பட்ட 47 வயதான பெண் காவல்துறைக்கு அளித்த புகாரின் அடிப்படையில், திரெங்கானுவில் உள்ள Universiti Teknologi Mara (UiTM) கிளை வளாகத்திற்கு பட்டமளிப்பு கான்வோ ரோப்கள் மற்றும் சீருடைகளை வழங்கும் குத்தகை உள்ளதாகவும், அதனை பெறுவதற்கு வாய்ப்பளித்ததாகவும் சந்தேக நபர் டிசம்பர் 23 அன்று தொடர்பு கொண்டதாக கோல திரெங்கானு மாவட்ட காவல்துறை தலைவர் ஏசிபி அஸ்லி முகமட் நோர் கூறினார்.
குறித்த ஆடைக்கான துணிகளைப் பெறுவதற்கு முந்தைய விற்பனையாளரின் சப்பிளையர் எனக் கூறப்படும் ஒருவரை தொடர்பு கொள்ளும்படி பாதிக்கப்பட்டவரை குறித்த பெண் சந்தேக நபர் வற்புறுத்தியதாக அவர் கூறினார்.
“பாதிக்கப்பட்டவர் விலைப் பட்டியலை பார்த்த பிறகு டெண்டரை ஏற்க ஒப்புக்கொண்டார்.
பின்னர் பாதிக்கப்பட்டவர் RM252,150 ஐப் பயன்படுத்தி பொருட்களை வாங்குவதற்காக ஐந்து வெவ்வேறு கணக்குகளுக்கு பணம் செலுத்தினார்,” என்று அவர் இன்று (டிசம்பர் 31) ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
இருப்பினும் பதிக்கப்பட்ட பெண் பொருட்களுக்கான ஆர்டர்கள் எதுவும் இல்லை என்பதை அறிந்த பிறகே தான் மோசடி செய்யப்பட்டதை உணர்ந்தார் என்று அவர் மேலும் கூறினார்.