பிரதமர் நாளை தாய்லாந்துக்கு உத்தியோகபூர்வ பயணம்

பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நாளை முதல் தாய்லாந்திற்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்கிறார் என்று மலேசிய வெளியுறவு அமைச்சகம் (விஸ்மா புத்ரா) தெரிவித்துள்ளது.

மலேசியாவின் 10 வது பிரதமராக பதவியேற்ற பிறகு அன்வார் தாய்லாந்திற்கு மேற்கொள்ளும் முதல் அதிகாரப்பூர்வ பயணம்இதுவாகும். தாய்லாந்து பிரதமர் பிரயுத் சான் ஓ-சாவின் அழைப்பின் பேரில் பிரதமர் அங்கு செல்வதாகவும் மலேசிய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறியுள்ளது.

இரு நாட்டு பிரதமர்களுக்கிடையிலான சந்திப்பில், பொருளாதார ஒத்துழைப்பு, எல்லைப் பகுதி மேம்பாடு மற்றும் நில எல்லைகளைக் கடக்கும் முக்கிய இணைப்புத் திட்டங்கள் ஆகியவை விவாதிக்கப்படும்,” என்று அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here