கடன் விடுபட…செவ்வாய்கிழமையில் வீட்டில் இதை மட்டும் பண்ணுங்க

வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான பிரச்சனைகள், கஷ்டங்கள் இருக்கலாம். ஆனால் இன்றைய கால கட்டத்தில் அதிகமானவர்களுக்கு இருக்கக் கூடிய பிரச்சனை என்றால் அது கடன் தான். மனிதர்களிடம் வாங்கிய கடன், வங்கியில் வாங்கிய கடன் ஏதாவது ஒன்று துன்பத்தை கொடுத்துக் கொண்டே இருக்கும். மாதந்தோறும் கடனுக்கான வட்டியை சரியாக கட்டுவதற்கும், கடனில் இருந்து விரைவில் விடுபடுவதற்கும் வேண்டிய வருமானம் கிடைக்க வேண்டும். இதற்கு எளிமையான ஒரு பரிகாரத்தை செய்து வந்தாலே போதும்.

கடன் பிரச்சனை மட்டுமல்ல, கடன் பிரச்சனையில் இருந்து விடுபடுவதற்கும் ஏற்ற கிரகமாக இருப்பது செவ்வாய் பகவான். கோபம், தைரியம், வேகம் ஆகியவற்றை தரும் கிரகமாக இருப்பவர் செவ்வாய் கிரகம். இதனால் கடனில் இருந்து விடுபட நினைப்பவர்கள் வழிபடுவதற்கும், பரிகாரம் செய்வதற்கும் ஏற்ற சக்தி வாய்ந்த நாளாக செவ்வாய்கிழமை கருதப்படுகிறது. செவ்வாய் பகவானுக்குரிய அதிபதி முருகப் பெருமான். செவ்வாயால் ஏற்படும் பிரச்சனைகளில் இருந்து விடுபட வேண்டும் என்றால் முருகப் பெருமானை செவ்வாய் கிழமையில் வழிபடுவது மிக மிக சிறப்பானதாகும்.

கடன் பிரச்சனையில் இருந்து மீள முடியாமல் தவிப்பவர்கள் செவ்வாய் கிழமையில் காலை அல்லது மாலையில் சிறிதளவு உப்பு மற்றும் மிளகு ஆகியவற்றை எடுத்து ஒன்றாக கலந்து கொள்ள வேண்டும். இதை இரண்டு பாகங்களாக பிரித்து வீட்டின் நிலை வாசலுக்கு வெளியே இரு புறமும் ஒரு சிறிய பாத்திரத்தில் வைத்து விடுங்கள். அதற்கு அருகில் இரண்டு அகல்களில் நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி விளக்கேற்ற வேண்டும். பஞ்ச கூட்டு எண்ணெய்யில் தீபம் ஏற்ற கூடாது. பிறகு வீட்டின் பூஜை அறையில் முருகப் பெருமானை நினைத்து மனதார வேண்டிக் கொண்டு விளக்கேற்றி வைக்க வேண்டும். முடிந்தவர்கள் செவ்வாய் கிழமையில் மாலை நேரத்தில் முருகன் ஆலயத்திற்கு சென்று அர்ச்சனை செய்து, ஒரு விளக்கேற்றி வைத்து விட்டு வரலாம்.

வாசலில் வைத்த உப்பு, மிளகு அப்படியே இருக்க வேண்டும். வெள்ளிக்கிழமை காலையில் அந்த உப்பு, மிளகை எடுத்து விட்டு, அன்று மாலை புதியதாக மீண்டும் உப்பு, மிளகை மாற்றி வைக்க வேண்டும். ஏற்கனவே வைத்த உப்பு, மிளகை நீர் நிலைகளில் கரைத்து விடலாம். அப்படி முடியாதவர்கள் கால் படாத வகையில் குப்பைகளுடன் சேர்த்து போட்டு விடலாம். ஆனால் இந்த உப்பு, மிளகு இருக்கும் குப்பைகளை வீட்டிற்குள் வைத்திருக்காமல் உடனடியாக வெளியேற்றி விட வேண்டும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால் வீட்டில் இருக்கும் கெட்ட சக்திகள், எதிர்மறை ஆற்றல்கள் நீங்கி, நல்ல சக்திகள் முருகப் பெருமான் அருளால் வீட்டில் நிறையும். எவ்வளவு கடன் இருந்தாலும் இந்த பரிகாரத்தை தொடர்ந்து செய்து வந்தால் நிச்சயம் பலன் கிடைக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here