தமிழ்நாடு,காஞ்சிபுரம் மாவட்டம் தமிழ்நாடு ஸ்ரீபெரும்புதூர் மேவளுர்குப்பம் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் அருணாச்சலம். இவரது மனைவி தேவி வயது 44,இவர்களுக்கு 2மகன்கள் உள்ளனர்.நேற்று முன் தினம் புத்தாண்டை ஒட்டி தேவியின் 2மகன்கள் வீட்டின் வெளியே புத்தாண்டை கொண்டாடி கொண்டு இருந்தனர். தேவி 2மகன்களையும் வீட்டின் உள்ளே அழைத்து உள்ளனர். ஆனால் 2பேரும் தாய் அழைத்ததை கண்டு கொள்ளாமல் அலட்சியமாக வெளியே கொண்டாடி கொண்டு இருந்தனர்.தான் நீண்ட நேரமாக வீட்டின் உள்ளே மகன்களை அழைத்தும் வராததால் மனம் உடைந்த தாய் தேவி வீட்டின் உள்ளே சென்று தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். நீண்ட நேரமாகி மகன்கள் உள்ளே சென்று பார்த்த போது தாய் தேவி தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து தேவியை மீட்டு ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு எடுத்து சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர் தேவி இறந்து விட்டதாக தெரிவித்தார். இது குறித்து தகவல் அறிந்த ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தர்மலிங்கம் மற்றும் போலீஸார் தேவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருங்கின்றனர்.