ஷா ஆலம்: பிங்க்ஃபிஷ் புத்தாண்டு தினக் கொண்டாடத்தில் நான்கு பேருக்கு மரணத்தை ஏற்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் போதை மருந்துகள் நிகழ்வில் வாங்கப்பட்டதாக நம்பப்படுகிறது என்று சிலாங்கூர் காவல்துறைத் தலைவர் ஹுசைன் ஒமர் கான் கூறினார். போதைப்பொருள்கள் அந்நிகழ்ச்சிக்கு கொண்டுவரப்பட்டு விற்கப்பட்டதாக ஹுசைன் இன்று ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
நேற்று, இறந்த நால்வரும் அந்த போதைப்பொருளை உட்கொண்டதாக நம்பப்படுவதாக அவர் கூறியிருந்தார். இருப்பினும் புலனாய்வாளர்கள் நச்சுயியல் பகுப்பாய்வு அறிக்கையை உறுதிப்படுத்த காத்திருக்கிறார்கள். ஹுசைன் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், பாதிக்கப்பட்டவர்கள் ஒருவருக்கொருவர் தொடர்பில்லை. நிகழ்வின் ஏற்பாட்டாளர் மற்றும் நிகழ்வில் நிறுத்தப்பட்டிருந்த முதலுதவி குழுவை போலீசார் வரவழைத்து வாக்குமூலம் அளிப்பார்கள் என்றார். மேலும் விவரங்களை அவர் தெரிவிக்கவில்லை.
நேற்றைய நிலவரப்படி, ஆறு சாட்சிகளிடம் போலீசார் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களின் நண்பர்கள் உட்பட மற்றவர்களை விசாரிக்க அவர்கள் திட்டமிட்டுள்ளனர். இந்த வழக்கை திடீர் மரணம் என விசாரித்து வரும் நிலையில், பாதிக்கப்பட்டவர்கள் விஷம் அருந்திருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.