உக்ரைனுக்கும் ரஷியாவுக்கும் இடையிலான சண்டை 3-வது வருடத்தை நிறைவு செய்ய இருக்கிறது. என்றாலும் இரு நாடுகளுக்கும் இடையில் போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை.
அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்ற நிலையில் போர் நிறுத்தத்திற்கு வாய்ப்புள்ளதாக சிறு நம்பிக்கை துளிர் விட்டுள்ளது. ஆனால் டொனால்டு டிரம்ப் இதை எவ்வாறு தீர்த்து வைப்பார் என்பது தெரியவில்லை.இந்த நிலையில்தான் ரஷியா தற்போது ஒரு நகரை பிடித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
உக்ரைனின் கிழக்குப் பகுதியில் உள்ள குராகோவ் என்ற நகரை பிடிக்க ரஷியப் படைகள் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக சண்டை நடத்தி வந்தன. உக்ரைனின் முக்கிய நகரமாக விளங்கிய குராகோவை கைப்பற்றிவிட்டோம் என ரஷியாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே டொனேட்ஸ்க் பிராந்தியத்தை கைப்பற்றிய நிலையில் தற்போது ஒரு நகரம் அத்துடன் சேர்ந்துள்ளது எனக் குறிப்பிட்டுள்ளது.
ஆனால் உக்ரைன் இது தொடர்பாக எந்த தகவலும் தெரிவிக்கவில்லை.இதற்கிடையே தங்கள் நாட்டின் குர்ஸ்க் எல்லையில் உக்ரைன் ராணுவம் புதிய தாக்குதலை தொடங்கியுள்ளது என ரஷியா தெரிவித்திருந்தது. இதை அறிவித்த ஓரிரு நாளில் உக்ரைன் நகரை கைப்பற்றியதாக தெரிவித்துள்ளது.
குராகோவ் தொழிற்சாலைகள் கொண்ட மண்டலமாகும். நீர்த்தேக்கம் மற்றும தெர்மல் பவர் பிளன்ட், தெற்கு உக்ரைனுக்கும், கிழக்கு பகுதிக்கும் இடையில் மிகப்பெரிய தேசியநெடுஞ்சாலை ஆகியவற்றை கொண்டுள்ளது.கடந்த நவம்பர் மாதம் இங்கு 7 ஆயிரம் முதல் 10 வரையிலான மக்கள் இருந்ததாக செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்திருந்தது. போர் தொடங்குவதற்கு முன்னதாக இதைவிட இரண்டு மடங்கிற்கு அதிகமான மக்கள் அங்கு வசித்து வந்தனர்.
இந்த நகர் கடந்த இரண்டு மாதங்களாக ராக்கெட் தாக்குதல், டிரோன் தாக்குதல், கடுமையான வெடிகுண்டு தாக்குதல்களால் சின்ன பின்னமாகியுள்ளது.போக்ரோவ்ஸ்க் என்ற நகரையும் முற்றுகையிட ரஷிய ராணுவம் முயற்சி மேற்கொண்டு வருகிறது.2022-ல் ரஷியா சட்டவிரோதமாக டொனேட்ஸ்க், அதன் அருகில் உள்ள லுஹான்ஸ், தென்கிழக்கில் உள்ள கெர்சன், சப்போரிஸியா ஆகிய நான்கு மாகாணங்களை தன்னுடன் இணைத்தது. ஆனால் அமெரிக்கா மற்றும்