2024 ம் ஆண்டிற்கான தமிழக அரசின் காமராஜர் விருது தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் தங்கபாலுவுக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: 2006ம் ஆண்டு முதல் காமராஜர் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 18 பேருக்கு விருது வழங்கப்பட்டு உள்ளது. 2024ம் ஆண்டிற்கான விருது தமிழக காங்., முன்னாள் தலைவர் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சருமான தங்கபாலு தேர்வு செய்யப்பட்டு உள்ளார். அவருக்கு விருதுடன் ரூ.2 லட்சம், ஒரு சவரன் தங்கப்பதக்கம் வழங்கப்படும். வரும் 15ம் தேதி இந்த விருதை சென்னையில் நடக்கும் நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் வழங்க உள்ளார். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.