மாநில அரசுகளின் கட்டுபாட்டில் இருந்து ஆலயங்களை விடுவிக்க கோரும் தனி நபர் தீர்மானம்

இந்தியாவில் மாநில அரசுகளின் கட்டுபாட்டிலிருந்து இந்து ஆலயங்களை விடுவிக்கும் தனிநபர் தீர்மானத்தை பிஜேபி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் சத்யபால் சிங் கொண்டு வந்துள்ளார்.

மாநில அரசுகளின் கட்டுபாட்டில் இந்து ஆலயங்கள் மட்டுமே இருக்கின்றனவே தவிர மற்ற சமய வழிப்பாட்டுத் தலங்கள் இதுபோன்ற கட்டுபாட்டை எதிர்நோக்கவில்லை.

பிரதமர் மோடியின் 12 ஆண்டுக்கால ஆட்சியில் இதுவே முதல் முறையாக இந்த தனி நபர் தீர்மானம் முன்மொழியப்பட்டுள்ளது.

டாக்டர் சத்யபால் சிங் இது தொடர்பில் 5 கோரிக்கைகளை முன்வைத்துள்ளார். முதல் கோரிக்கை மாநில அரசுகள் எந்த சமய அமைப்புகளை நிர்வகிக்கக் கூடாது அல்லது கட்டுப்பாட்டில் எடுத்து கொள்ளக்கூடாது. இரண்டாவது கோரிக்கை சமய அமைப்புகளை தனது கட்டுபாட்டில் எடுத்து கொள்ள அனுமதிக்கும் எந்தவித  சட்டவிதிமுறைகளையும் மாநிலங்கள் கொண்டுவர கூடாது.

மூன்றாவது கோரிக்கை தங்களின் வழிப்பாட்டு தலங்களையும அமைப்புகளையும் அனைத்து சமூகங்களும் நிலை நிறுத்த அனுமதிக்கப்பட வேண்டும். அவர்கள் விரும்புகின்ற வழிகளில் அவற்றை நிர்வகிக்க வழிவிட வேண்டும்.

நான்காவதாக சமய நோக்கங்கள் எனும் பெயரில் ஆலயங்களின் வருமானம் கையாளடல் செய்யப்படுவதை அனுமதிக்கக்கூடாது. ஐந்தாவதாக எந்த சமய அமைப்புகளையும் மாநில அரசுகள் அபகரிப்பதில் இருந்து தடுப்பதற்கு அரசியல் அமைப்பு சட்டத்தின் 26ஆவது விதியில் திருத்தம் செய்ய வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here