ஒரு மனிதனுக்கு வாழ்க்கையில் கஷ்டம் எப்போது வரும். நல்ல கிரகங்கள் கூட, துஷ்ட கிரகங்களோடு சேர்ந்து கெட்ட வேலை செய்யும் போது, பிரச்சனைகள் வரும். உங்களுக்கு தாறுமாறாக பிரச்சனைகளை வருகிறதா, பல ஆயிரம் செலவு செய்து பரிகாரங்களை செய்ய வேண்டும் என்ற கட்டாயம் இருக்கிறதா.
அனுமனின் பாதங்களை மட்டும் நம்பிக்கையோடு இருக்க பற்றி கொண்டு இந்த இரண்டு வரி தாரக மந்திரத்தை சொன்னாலே போதும். அந்த மந்திரம் என்ன அந்த மந்திரத்தை எப்படி உச்சரிப்பது?
எப்போது நேரம் கிடைக்கிறதோ, அப்போது இந்த மந்திரத்தை சொல்லலாம். குறிப்பாக செவ்வாய்க்கிழமை, சனிக்கிழமை, வியாழக்கிழமை இந்த மூன்று நாட்களில் இந்த மந்திரத்தை சொன்னால் கூடுதல் பலன் முடிந்தால் வீட்டு பக்கத்தில் ஹனுமன் சன்னிதானம் இருக்கிறது என்றால் அந்த கோவிலுக்கு சென்று அனுமனுக்கு 2 விளக்கு போட்டு, இரண்டு துளசி இலைகளை அனுமனுக்கு சாத்தி கோவிலில் அமர்ந்து இந்த மந்திரத்தை சொல்லுங்கள்.
இதற்கெல்லாம் நேரம் இல்லையா பூஜை அறையில் விளக்கு ஏற்றி பெருமாளை ஹனுமனாக பாவித்து கொள்ளுங்கள். அனுமனது திருவுருவப்படம், ராமரது பட்டாபிஷேகம் படம் இருந்தால் அந்த படத்திற்கு முன்பு அமர்ந்து இந்த மந்திரத்தை சொல்லலாம். ஆக மொத்தம் அனுமனை நினைக்க வேண்டும். இந்த 4 வரி மந்திரத்தை நம்பிக்கையோடு படிக்க வேண்டும்.
நன்றாக மனதில் பதிய வைத்துக் கொள்ளுங்கள். நம்பிக்கையோடு படிக்க வேண்டும். இந்த மந்திரத்தை படித்தால் நமக்கு கிரகங்கள் எந்த கெடுதலும் செய்யாது என்று முதலில் நம்புங்கள் பிறகு அனுமன் உங்களுக்கு வந்து நல்லதை செய்வார்.
நீங்கள் தினமும் படிக்க வேண்டிய அந்த ஹனுமன் மந்திரம் இதோ.
கிரக தோஷம் விலக அனுமன் மந்திரம்:
அஞ்சனா கர்ப்ப சம்பூதம் குமாராம்
பிரம்ம சாரினம்
துஷ்ட கிரஹ நிவாஷய
அனுமந்தம் உபாஸ் மயே!
மந்திரம் இவ்வளவுதான். நான்கு முறை இந்த மந்திரத்தை படித்தால் ஐந்தாவது முறை சரளமாக வந்துவிடும். பத்தாவது முறை மனப்பாடமாக சொல்ல துவங்கி விடுவீர்கள். துஷ்ட கிரகங்கள் நாசமாகிவிடும். கவலையே படாதீங்க துஷ்ட கிரகங்கள் உங்களை விட்டு பயந்து ஒதுங்கி செல்லும். அனுமனை நினைத்து இந்த மந்திரத்தை தினமும் சொல்லுங்கள். நம்பிக்கையோடு சொல்லுங்கள். நல்லதே நடக்கும் .