ஜோகூரின் கோத்தா திங்கி மாவட்டத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (ஜனவரி 10) காலை முதல் பெய்துவரும் மழை காரணமாக நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வீடுகளிலிருந்து வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
வெள்ள நீர் அதிகரித்து வருவதால் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டு வருபவர்களுக்குத் தற்காலிக நிவாரண நிலையங்களில் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது.
இன்று சனிக்கிழமை (ஜனவரி 11) காலை எட்டு மணி நிலவரப்படி 303 குடும்பங்களைச் சேர்ந்த 897 பேர் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டு 13 தற்காலிக துயர் துடைப்பு மையங்களுக்கு இடம் மாற்றப்பட்டிருப்பதாக ஜோகூர் பேரிடர் மேலாண்மைக் குழு தெரிவித்துள்ளது.
வெள்ளம் காரணமாக கோத்தா திங்கியின் ஆறு சாலைகள் வாகனப் போக்குவரத்துக்கு மூடப்பட்டுள்ளன.