இன்ஃபோசிஸ் நிறுவனத்துடனான இங்கிலாந்து அரசின் உறவு; சர்ச்சையில் மாட்டிய ரிஷி சுனக்

பிரதமர் ரிஷி சுனக் தனது மாமனார் வீட்டுடன் தொடருடைய இந்தியாவின் இன்ஃபோசிஸ் நிறுவனத்துக்கு, இங்கிலாந்தில் அதிக முன்னுரிமை வழங்குவதாக புகாருக்கு ஆளாகி இருக்கிறார்.

UK Opposition slams 'VIP access' to Infosys due to Rishi Sunak's familial connection - BusinessToday

பிளவுறாத இந்தியாவில் தனது மூதாதையர்களை கொண்டவர் ரிஷி சுனக். தற்போது இங்கிலாந்தின் பிரதமராக இருக்கும் இவர், இந்த வகையில் இந்தியாவின் மகனாக கொண்டாடப்படுகிறார். இன்ஃபோசிஸ் மென்பொருள் நிறுவனத்தின் இணை நிறுவனரான நாராயணமூர்த்தியின் மகள் அக்‌ஷதாவை மணந்ததன் மூலம், இந்தியாவின் மருமகனாகவும் கொண்டாடப்படுகிறார். ஒரு காலத்தில் இந்தியாவை காலனி தேசமாக வைத்திருந்த இங்கிலாந்தை, தற்போது இந்தியாவின் வம்சாவளி ஆள்வதில் இந்தியர்களுக்கு அலாதி பெருமிதமும் உண்டு.

ஆனால் இந்த இந்திய தொடர்பே இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கிற்கு குடைச்சலாகவும் மாறி இருக்கிறது. மனைவி குடும்பத்துக்கு நெருக்கமான இன்ஃபோசிஸ் நிறுவனம், தனது இங்கிலாந்து சாம்ராஜ்ஜியத்தை விரிவுபடுத்த பிரதமர் குடும்பம் சகல வழிகளிலும் ஒத்தாசையாக இருப்பதாக அங்கத்திய ஊடகங்கள் குற்றம் சாட்டுகின்றன.

UK PM Rishi Sunak, wife lose $668 million as value of their Infosys stake plummets - World News

இதற்கு உதாரணமாக இங்கிலாந்தின் வர்த்தக அமைச்சர் டொமினிக் ஜான்சன், பெங்களூருவில் நடைபெற்ற இன்ஃபோசிஸ் அலுவல் சந்திப்பில் பங்கேற்றதுடன், இன்ஃபோசிஸ் நிறுவனத்துக்கான ஆக முடிந்த உதவிகளை செய்வதாக உறுதியளித்ததை ஆதாரங்களுடன் ஊடகங்கள் அம்பலப்படுத்தின. அதே போன்று, கொரோனா மத்தியில், ரிஷி சுனக் கிட்டத்தட்ட செயல் பிரதமராக இருந்த காலத்தில், ஊரடங்கு விதிகளுக்கு மாறாக இன்ஃபோசிஸ் நிறுவனத்துக்கான முன்னுரிமைகள் வழங்கப்பட்டதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது.

ரிஷி சுனக்கின் மனைவி அக்‌ஷதா மூர்த்தி, இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் 500 மில்லியன் பவுண்ட் மதிப்பிலான பங்குகளை தன் வசம் வைத்திருக்கிறார். இதற்கான டிவிடெண்ட் தொகையாக மட்டும் கடந்தாண்டில் சுமார் 13 மில்லியன் பவுண்டுகளை பெற்றிருக்கிறார். இந்த வகையில் இங்கிலாந்தின் மிகவும் பணக்கார பிரதமர் குடும்பம் என்ற பெருமைக்கும் ரிஷி சுனக் – அக்‌ஷதா மூர்த்தி தம்பதி ஆளாகி இருக்கிறது.

Rishi Sunak's family firm Infosys given 'VIP access' by Tory minister

ஆனால் அந்த வருவாய்க்கான வரியை இங்கிலாந்தில் கட்டாது அக்‌ஷதா ஏமாற்றுவதாக புகார்கள் எழுந்தன. இங்கிலாந்தில் குடியுரிமை பெறாத ஒருவர், தனது வெளிநாட்டு வருமானத்துக்கு அங்கே வரி கட்ட வேண்டியதில்லை என்ற சட்டத்தின் ஓட்டையில் புகுந்து அக்‌ஷதா தப்புவதாக புகார்கள் எழுந்தன. சர்ச்சைகள் அதிகரிக்கவே, இங்கிலாந்திலும் வரி செலுத்துவதாக அக்‌ஷதா அறிவித்தார். ஆனால் அதனை வெளிப்படையாக பின்பற்றவில்லை என்ற புகார்கள் இப்போதும் தொடர்ந்து வருகின்றன.

மேலும், இங்கிலாந்தின் பெரும் மென்பொருள் ஒப்பந்தங்கள் இன்ஃபோசிஸ் நிறுவனத்துக்கு வழங்கப்படுவதாகவும், இதற்காக அந்த நிறுவனத்துக்கு விஐபி மரியாதையும், முன்னுரிமையும் வழங்கப்படுவதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. நாட்டு மக்களின் வரி வருவாய் இந்த வகையில், பிரதமர் குடும்பத்துடன் நெருக்கமான இந்திய நிறுவனத்துக்கு மடை மாற்றப்படுவதாகவும் அவர்கள் குறைபடுகின்றனர். ஏற்கனவே எதிர்க்கட்சியினர் மட்டுமன்றி தன்னுடைய கட்சி சகாக்கள் மூலமான அதிருப்திகளால் ஊசலாடும் ரிஷி சுனக்கின் பதவிக்கு இதனால் கூடுதல் சர்ச்சை சேர்ந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here