டெலிகிராம் மற்றும் அதன் இரண்டு கணக்குகளுக்கு எதிராக, மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் வழக்குத் தொடர்ந்துள்ளது

பொது நிறுவனங்கள் மீதான நம்பிக்கையை சிதைத்து சமூக ஒழுங்கை அச்சுறுத்தும் அபாயத்தை கொண்ட உள்ளடக்கத்தை பரப்பியதாகக் கூறி டெலிகிராம் மற்றும் அதன் இரண்டு கணக்குகளுக்கு எதிராக, மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் வழக்குத் தொடர்ந்துள்ளது.

MCMC பல பேச்சுவார்த்தைகளை நடத்தி ஒத்துழைப்பு வழங்கியும், மீண்டும் புகாரளிக்கப்பட்ட உள்ளடக்கங்கள் மீது நடவடிக்கை எடுக்க டெலிகிராம் தவறியதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த உள்ளடக்கங்கள் தொடர்ந்து பரவுவதைத் தடுக்க, உயர் நீதிமன்றத்திடமிருந்து இடைக்காலத் தடை உத்தரவைப் பெற்றதாக MCMC அறிக்கையொன்றில் கூறியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here