புக்கிட் மெர்தஜாம்: நஜிப் ரசாக் சிறைத்தண்டனையின் எஞ்சிய காலத்தை வீட்டுக் காவலில் அனுபவிக்க அனுமதிக்கும் அரச கூட்டமைப்பு சட்டத்துறைத் தலைவர் அறைக்கு அனுப்பப்பட்டதாக பிரதமர் அன்வார் இப்ராகிம் தெளிவுபடுத்தினார். இன்று நடைபெற்ற முஹிப்பா மடானி நிகழ்ச்சியில் பேசிய அன்வார், அரசு பொதுமக்களிடம் இருந்து கூடுதல் தகவல்களை மறைத்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை மறுக்கவே இவ்வாறு கூறினார்.
அக்கடிதம் சட்டத்துறைத் தலைவருக்கு அனுப்பப்பட்டது. எனக்கு அல்ல, மத்திய பிரதேச மன்னிப்பு வாரிய உறுப்பினர்களுக்கு அல்ல. அட்டர்னி ஜெனரல் அதை இஸ்தானா நெகாராவிடம் சமர்ப்பித்தார். அதுதான் நிலைமை. அதை நாங்கள் மறைக்கவில்லை என்றார்.









