தற்போதைய வெப்பமான காலநிலையில் திறந்த வெளியில் எரிப்பதைத் தவிருங்கள் – கிளாந்தான் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை

தற்போதைய வெப்பம் மற்றும் வறண்ட காலநிலையின்போது, திறந்தவெளியில், குறிப்பாக எளிதில் தீப்பற்றக்கூடிய பகுதிகளில் எரியூட்டும் நடவடிக்கைகளை தவிர்க்குமாறு கிளாந்தான் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

திறந்தவெளியில் எரிப்பது மனித ஆரோக்கியத்தில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடியவாறு காற்றின் தரத்தை குறைக்கும் என்றும், தற்போதைய வெப்பம் மற்றும் வறண்ட வானிலையால் தீ வேகமாக பரவிவிடும், அதைக் கட்டுப்படுத்துவது மற்றும் அணைப்பது கடினமாக உள்ளது என்று, கிளாந்தான் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை இயக்குனர் ஜைனல் மடாசின் கூறினார்.

“புள்ளிவிவரங்களின்படி, கிளாந்தன் இந்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரை மொத்தம் 280 திறந்த எரிப்பு சம்பவங்களை பதிவு செய்துள்ளது, இது கடந்த ஆண்டு முழுவதும் பதிவு செய்யப்பட்ட 135 வழக்குகளுடன் ஒப்பிடுகையில் மிகுதியான அதிகரிப்பாகும்” என்று அவர் கூறினார்.

மேலும் சுற்றுச்சூழல் திணைக்களத்தின் (DOE) படி, ஜோகூரின் சிகாமாட் மற்றும் கிளாந்தானின் தானா மேரா ஆகிய இரண்டு பகுதிகளில் நேற்று ஆரோக்கியமற்ற காற்றின் தர அளவீடுகள் பதிவாகியுள்ளதும் குறிப்பிடத்தக்கது என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here