கோலாலம்பூர்:
கடந்த வெள்ளிக்கிழமை கோலாலம்பூர் மருத்துவமனையிலிருந்து (HKL) காணாமல் போனதாகக் கூறப்படும் 65 வயதான ஹுசின் ஓத்மானைக் கண்டுபிடிப்பதற்கு காவல்துறை பொதுமக்களின் உதவியை நாடியுள்ளது.
அவர் கடந்த 10 தேதி இரவு 7.15 மணியளவில் காணாமல் போனதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது என்று, டாங் வாங்கி மாவட்ட காவல்துறை தலைவர் ACP சுலிஸ்மீ அஃபெண்டி சுலைமான் கூறினார்.
காணாமல்போன ஹுசின் கடைசியாக வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு HKL இன் ஐந்தாவது பாடியில் உள்ள வார்டு இலக்கம் 24 இல் இருந்து வெளியேறினார் என்றும், அவர் தோராயமாக 168 செமீ உயரம் கொண்டவர் என்றும், வெள்ளை முடி மாற்றும் கண்ணாடி அணிந்து காணப்படுவார் என்றும் அவர் சொன்னார்.
மேலும் அவர் கடைசியாக மினி லவ் லோகோவுடன் சாம்பல் நிற சட்டை, சாம்பல் நிற ஷார்ட்ஸ் மற்றும் செருப்புகள் அணிந்து சிவப்பு மற்றும் வெள்ளை நிற பிளாஸ்டிக் பேக்கேஜை எடுத்துச் சென்றார்” என்று அவர் நேற்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஹுசின் இருக்கும் இடத்தைப் பற்றிய தகவல் தெரிந்தவர்கள், டாங் வாங்கி காவல் நிலையத்தை 03-2600 2264 என்ற எண்ணில் அல்லது டாங் வாங்கி IPD கட்டுப்பாட்டு மையத்தை 03-2600 2222 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும் அல்லது அருகிலுள்ள காவல் நிலையத்தில் புகாரளிக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார்.