திருப்பதியில் ரூ.46 லட்சம் மதிப்புள்ள தங்கம் திருட்டு – தேவஸ்தான ஊழியர் கைது

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நாடு முழுவதும் இருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்கின்றனர். அவ்வாறு கோவிலுக்கு வரும் பக்தர்கள் பணம், நகை, தங்கம் மற்றும் வெள்ளி உள்ளிட்டவற்றை காணிக்கையாக செலுத்துகின்றனர்.

இந்த நிலையில், பக்தர்களால் காணிக்கையாக செலுத்தப்பட்ட ரூ.46 லட்சம் மதிப்புள்ள 650 கிராம் தங்கத்தை திருடிய வழக்கில் தேவஸ்தான ஊழியர் பென்சாலய்யா(வயது 40) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஓராண்டாக சுமார் 10 முதல் 15 முறை இவர் தங்கத்தை திருடியுள்ளார் என்றும், அவரிடம் இருந்து 650 கிராம் தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here