இன்று நிறைய பேர் வீடுகளில் இருக்கக்கூடிய பிரச்சனை பயம். கண் திருஷ்டியால் பயம், அடுத்தவர்களுடைய பொறாமை குணத்தால் பயம், கண்ணுக்குத் தெரியாத ஏவல் பில்லி சூனியத்தால் பயம். இப்படிப்பட்ட பிரச்சனையை சிந்தித்து சிந்தித்து சில பேர் மனநோய்க்கு ஆளாகிறார்கள்.
இந்த பிரச்சனையில் இருந்தெல்லாம் வெளிவர வேண்டும். நம்முடைய வீட்டில் நல்ல சக்தி மட்டும்தான் இருக்கிறது, தெய்வ சக்தி மட்டும் தான் இருக்கிறது என்று முதலில் நாம் நம்ப வேண்டும். இந்த நல்ல சக்தியை வீட்டில் குடியேற்றுவதற்கு நிறைய செலவு செய்து ஹோமங்கள் எல்லாம் செய்யலாம். ஆனால் அதெல்லாம் சாமானிய மக்களால் முடியாது.
உங்களுக்கு சந்தேகம் இருக்கிறது. வீட்டில் மன நிம்மதி இல்லை. வீட்டில் சண்டை சச்சரவு, ஒரு நல்ல காரியம் கூட நடக்கவில்லை, ஏதோ ஒரு பிரச்சனை வீட்டில் இருக்கிறது என்று முடிவு செய்து விட்டீர்கள். முதலில் வீடு முழுக்க சுத்தம் செய்து விடுங்கள். நிலை வாசலை துடைத்து மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்து, ஒரு கோலம் அழகாக போட்டு விடுங்கள்.
பூஜை அறையை அலங்காரம் செய்து விடுங்கள். வீடு முழுவதும் புகை வரும் படி கொஞ்சம் சாம்பிராணி தூபம் வாசமாக போட்டு, வைத்து விடுங்கள். லட்சுமி நரசிம்மரை மனதார நினைத்துக் கொள்ளுங்கள். நிலை வாசலில் அந்த சாம்பிராணி தூபத்தை காட்டுங்கள். காட்டிக் கொண்டு வீடு முழுவதும் அந்த சாம்பிராணி தூபத்தை காட்ட வேண்டும். இறுதியாக அந்த சாம்பிராணி தூபத்தை பூஜை அறையில் கொண்டு வந்து வைக்க வேண்டும்.
இப்படி நிலை வாசலில் இருந்து சாம்பிராணி தூபம் காட்ட துவங்கும்போது இந்த மந்திரத்தை சொல்ல துவங்குங்கள். வாய்விட்டு இந்த மந்திரத்தை சொல்லலாம். இந்த சத்தம் வீட்டில் . நரசிம்மரின் நாமத்தை உச்சரிக்கின்றோம். அவ்வளவுதான். அந்த நரசிம்மர் கூப்பிட்ட குரலுக்கு ஓடி வரக்கூடிய ஒரு தெய்வம். நரசிம்மரிடம் எப்போதுமே நாளை என்ற வார்த்தை கிடையாது. இன்று இப்போதே பிரச்சனைக்கு முடிவு செய்யக்கூடிய சக்தி கொண்டவர் நரசிம்மர்.
அந்த நரசிம்மரை நினைத்து இந்த மந்திரத்தை 108 முறை சொல்லுங்கள்.
சக்தி வாய்ந்த நரசிம்மர் மந்திரம்
ஓம் ன்ரிம் ன்ரிம் ன்ரிம் நரசிம்மாய நமஹ
முதலில் இந்த மந்திரத்தை உச்சரிப்பதற்கு உங்களுக்கு சிரமமாக இருக்கலாம். இந்த மந்திரம் ஹிந்தியில் சொல்லப்பட்டுள்ள மந்திரம். அதை உங்களுக்கு தமிழிலும் ஆங்கிலத்திலும் கொடுக்கப்பட்டுள்ளது. 108 முறை வீட்டில் இந்த மந்திரம் சத்தமாக ஒலிக்கப்பட்டால் வீட்டில் இருக்கும் கெட்ட சக்திகள் எல்லாம் வீட்டை விட்டு வெளியேற தொடங்கிவிடும்.
இந்த மந்திரத்தை உச்சரிக்க முடியவில்லை என்றால் இந்த வார்த்தையை யூடியூபில் டைப் செய்தாலும் உங்களுக்கு வரும். வீடியோவில் அவர்களே மந்திரத்தை உச்சரிப்பார்கள். அந்த உச்சாடனத்தை வீட்டில் ஒலிக்க விடுங்கள். அந்த மந்திரம் வீட்டில் சத்தமாக கேட்கும் போது வீட்டில் இருக்கும் கண் திருஷ்டியும் கெட்ட சக்தியும் விலகும் என்பது நம்பிக்கை. நரசிம்மரின் இந்த எளிமையான வழிபாட்டில் உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் பின்பற்றி பலன் பெறவும்.




















