ஆடவர் ஒருவரை ஸ்டீயரிங் பூட்டினால் தாக்கும் வைரலான வீடியோவைத் தொடர்ந்து நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். காஜாங் மாவட்ட காவல்துறை தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்த சம்பவம் டிசம்பர் 29, 2024 அன்று செமினியில் நடந்தது. இந்த வழக்கு குற்றவியல் சட்டம் பிரிவு 324 இன் கீழ் விசாரிக்கப்படுகிறத என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த குற்றத்திற்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது சவுக்கடி அல்லது இரண்டில் ஏதேனும் ஒன்று தண்டனையாக விதிக்கப்படும்.
32 மற்றும் 36 வயதுடைய நான்கு சந்தேக நபர்களில் மூவர் இதற்கு முன்னர் போதைப்பொருள் மற்றும் கிரிமினல் குற்றங்களைச் செய்தவர்கள் என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கு விசாரணையில் உள்ளது. சம்பவம் தொடர்பான தகவல்களுடன் பொதுமக்கள் தங்கள் அருகிலுள்ள காவல் நிலையத்தை தொடர்பு கொள்ளலாம் அல்லது விசாரணை அதிகாரி முகமட் அமிருல் அப்த் வஹாப்பை 013-549 5236 என்ற எண்ணில் அழைக்கலாம்” என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர்களில் இருவர் ஜனவரி 8 மற்றும் ஜனவரி 12 ஆகிய தேதிகளில் கைது செய்யப்பட்டனர், மற்ற இரண்டு சந்தேக நபர்கள் புதன்கிழமை (ஜனவரி 15) கைது செய்யப்பட்டனர். 4 பேருக்கான தடுப்புக்காவல் நாளை விண்ணப்பிக்கப்படும்.
சமூக ஊடகங்களில் வைரலான வீடியோ, ஒரு நபர் சட்டையின்றி பாதிக்கப்பட்டவரை கீழே தள்ளுவதை காட்டுகிறது. அவரது கூட்டாளி அவரை ஸ்டீயரிங் பூட்டால் தாக்கி அதை பதிவுசெய்தார். ஸ்டியரிங் பூட்டைக் கொண்டு தாக்கிய ஆடவருக்கு மேலும் இருவர் உறுதுணையாக இருப்பதைக் காண முடிந்தது.