தனது 15 வயது வளர்ப்பு மகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக சந்தேகிக்கப்படும் 36 வயதான நபர் ஒருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த மாத தொடக்கத்தில் பூச்சோங்கில் உள்ள அவர்களது வீட்டில் இந்த சம்பவம் நடைபெற்றதாக சந்தேக நபரின் மனைவி அளித்துள்ள புகாரை அடுத்து, அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக புக்கிட் அமான் பாலியல், பெண்கள் மற்றும் குழந்தைகள் விசாரணைப் பிரிவின் துணை இயக்குநர் Siti Kamsiah Hassan கூறினார்.
குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள் சட்டம் 2017 இன் பிரிவு 14(a) இன் கீழ், இந்த வழக்கு விசாரிக்கப்படுவதாகவும், இந்த சந்தேக நபர் ஏற்கெனவே 2021 ஆம் ஆண்டு பாதிக்கப்பட்ட இந்த சிறுமியை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்ததாகவும், இந்த சம்பவம் குறித்து சிறுமி தனது தாயிடம் தெரிவித்தபோதும், சந்தேக நபர் மீண்டும் அவ்வாறு செய்ய மாட்டேன் என்று கெஞ்சி உறுதியளித்த பிறகு, அந்த தாயார் புகார் அளிக்கவில்லை என முதற்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளதாக Siti Kamsiah கூறினார்.
இருப்பினும், ஜனவரி 9 ஆம் தேதி தனது தாயார் வேலைக்குச் சென்றிருந்தபோது, சந்தேக நபர் மீண்டும் வீட்டில் தன்னை துஷ்பிரயோகம் செய்ததாக பாதிக்கப்பட்ட சிறுமி தாயிடம் கூறியபோதுதான்
தாயார் புகாரளிக்க முன்வந்தாக Siti Kamsiah Hassan மேலும் கூறினார்.