பூலாய் நாடாளுமன்றத்தில் முன்கூட்டிய வாக்குப்பதிவு நாளான இன்று 11 மணி நிலவரப்படி 51% வாக்குகள் பதிவு

ஜோகூர் பாரு: பூலாய் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 5) காலை 11 மணி நிலவரப்படி காவல்துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் அடங்கிய ஆரம்ப வாக்காளர்களின் எண்ணிக்கை 51% ஆக இருந்தது என்று தேர்தல் ஆணையம் (EC) தெரிவித்துள்ளது. ஒரு அறிக்கையில், காலை 10 மணிக்கு இந்த எண்ணிக்கை 34% என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

கெம்பாஸில் உள்ள கெம்பாஸ் காவல் நிலையத்திலும், தம்போயில் உள்ள மரைன் போலீஸ் II தலைமையகத்திலும் இரண்டு ஆரம்ப வாக்குப்பதிவு மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. தேர்தல் ஆணையத்தின் தகவல்களின் அடிப்படையில், மொத்தம் 46 வாக்காளர்கள் கெம்பாஸ் ஆரம்ப வாக்களிப்பு மையத்திலும், 881 வாக்காளர்கள் தம்போயிலும் வாக்களிக்க உள்ளனர். கெம்பாஸ் காவல் நிலையத்தில் உள்ள மையம் மதியம் வரை திறந்திருக்கும். தம்போயில் உள்ள மையம் மாலை 5 மணிக்கு மூடப்படும்.

ஜூலை 23 அன்று உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவு அமைச்சராக இருந்த டத்தோஸ்ரீ சலாவுதீன் அயூப் இறந்ததைத் தொடர்ந்து ஜோகூரில் நடைபெற்ற இரண்டு இடைத்தேர்தல்கள் நடைபெறவுள்ளது ஒன்று பூலாய் நாடாளுமன்றத் தொகுதி, மற்றொன்று சிம்பாங் ஜெராம் மாநிலத் தொகுதிகயாகும். இருப்பினும், சிம்பாங் ஜெராமுக்கு முன்கூட்டியே வாக்குப்பதிவு இருக்காது.

இரு தொகுதிகளுக்கும் சனிக்கிழமை (செப். 9) தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. ஆகஸ்ட் 26 ஆம் தேதி தொடங்கிய பிரச்சார காலம் செப்டம்பர் 8 ஆம் தேதி இரவு 11.59 மணிக்கு முடிவடைகிறது. இரண்டு இடங்களிலும் தற்போதைய பக்காத்தான் ஹராப்பான், பெரிகாத்தான் நேஷனல் மற்றும் சுயேட்சைகள் அடங்கிய மும்முனை போட்டிகள் காணப்படுகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here