Google நிறுவனத்திற்கு $16.7 மில்லியன் அபராதம் விதித்த இந்தோனேசியா

ஜகார்த்தா:

நியாயமற்ற தொழில் நடைமுறைகளுக்காக Google நிறுவனத்திற்கு இந்தோனேசியா மோசடித் தடுப்பு முகவை $16.7 மில்லியன் அபராதம் விதித்துள்ளது.

இந்தோனேசியாவைச் சேர்ந்த செயலி மேம்பாட்டாளர்கள் ‘Google play pilling ’ முறையைப் பயன்படுத்த வேண்டியிருந்த நிலையில், மற்ற கட்டண முறைகளைக் காட்டிலும் Google கூடுதல் கட்டணம் வசூலித்ததாகச் சந்தேகப்பட்டு, இந்தோனீசியா கடந்த 2022ஆம் ஆண்டு விசாரணையைத் தொடங்கியது.

இல்லாவிடில், Google play apps செயலியகத்திலிருந்து தங்களின் செயலி நீக்கப்படும் நிலையை அவர்கள் எதிர்நோக்கியதாகவும் கூறப்பட்டது.

இதனால், பயனர்களின் எண்ணிக்கை குறைந்து, செயலி மேம்பாட்டாளர்களின் வருமானம் குறைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, முற்றுரிமைக்கு எதிரான இந்தோனீசியச் சட்டத்தை கூகல் மீறியது கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.

Google play pilling முறையின்கீழ் Google நிறுவனம் 30% வரை கட்டணம் வசூலித்ததாக விசாரணைக் குழு தெரிவித்தது.

மொத்தம் 280 மில்லியன் மக்கள்தொகையைக் கொண்ட இந்தோனேசியாவில் Google 93% சந்தையைத் தன்வசம் வைத்துள்ளதாகச் சொல்லப்படுகிறது.

இந்நிலையில், அபராதத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக புதன்கிழமையன்று (ஜனவரி 22) Google பேச்சாளர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here