மூவாரில் 11 மாதக் குழந்தை மரணம்; பராமரிப்பு மையம் உரிமம் பெறாமல் இயங்கியுள்ளது -JKM

மூவார்:

கடந்த ஆண்டு அக்டோபரில் 11 மாத குழந்தையின் மரணத்திற்கு காரணமானதாகக் கூறப்படும் மூவாரிலுள்ள ஒரு தனியார் பராமரிப்பு மையம் முறையான உரிமம் இல்லாமல் நடத்தி வருவதும், சமூக நலத் துறையில் (JKM ) பதிவு செய்யப்படாததும் கண்டறியப்பட்டது.

தாலியான் காசி மூலம் அளிக்கப்பட்ட புகார்,குழந்தையின் தந்தையின் புகாரின் பேரிலும் மேற்கொண்ட விசாரணையில் இது தெரியவந்ததாக ஜோகூர் பெண்கள், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டுக் குழுத் தலைவர் கைரின்-நிசா இஸ்மாயில் தெரிவித்தார்.

“விசாரணையின் அடிப்படையில், நர்சரியாகப் பயன்படுத்தப்பட்ட வளாகம் 1984 ஆம் ஆண்டு குழந்தை பராமரிப்பு மையச் சட்டத்தின் பிரிவு 7 இன் கீழ் ஒருபோதும் பதிவு செய்யப்படவில்லை.

“மேலும், பராமரிப்பாளர் பெர்மாட்டா ஆரம்பகால குழந்தைப் பருவ பராமரிப்பு மற்றும் கல்வி தொடர்பான பாடநெறியில் கலந்து கொள்ளவில்லை,” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here