வெளிநாட்டு கார்கள் RON95 ஐப் பயன்படுத்த முடியாது; ஜோகூரில் உள்ள பெட்ரோல் நிலையங்களுக்கு நினைவூட்டல்

ஜோகூர்:

சீனப் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக ஆயிரக்கணக்கான சிங்கப்பூர் பதிவு செய்யப்பட்ட வாகனங்கள் ஜோகூரில் நுழையும் என எதிர்பார்க்கப்படுவதால், குறித்த வெளிநாட்டு வாகனங்களுக்கு மானிய விலையில் RON95 பெட்ரோல் நிரப்பப்படாது இருப்பதை உறுதி செய்யுமாறு மாநில உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவு அமைச்சகம் அம்மாநிலத்திலுள்ள அனைத்து பெட்ரோல் நிலையங்களுக்கு நினைவூட்டியுள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை (ஜனவரி 21) ஜோகூர் பாரு நகரில் உள்ள ஒரு பெட்ரோல் நிலையத்தில் சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட கார் RON95 உடன் எரிபொருள் நிரப்புவது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானதை அடுத்து, மாநில அமைச்சக இயக்குனர் லிலிஸ் சஸ்லிண்டா போர்னோமோ இந்த நினைவூட்டலை வெளியிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here