கோலாலம்பூர் :
இன்று ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 26) மதியம் 12 மணி வரை நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய மழை, கனமழை மற்றும் பலத்த காற்று வீசும் என்று மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) எச்சரித்துள்ளது.
இந்த வானிலையை பேராக் (மஞ்சுங், மத்திய பேராக், பாகன் டத்தோ மற்றும் ஹிலிர் பேராக்) மற்றும் சிலாங்கூர் (சபாக் பெர்னாம், கோலா சிலாங்கூர், கிள்ளான் , கோம்பாக், பெட்டாலிங், கோலா லங்காட், உலு லங்காட் மற்றும் சிப்பாங்) ஆகியவை எதிர்கொள்ளும் என்று மெட்மலேசியா இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இவை தவிர, கோலாலம்பூர் மற்றும் புத்ராஜெயா கூட்டாட்சி பிரதேசங்களும் நெகிரி செம்பிலான் (சிரம்பான், போர்ட்டிக்சன் மற்றும் ரெம்பாவ்) மற்றும் மலாக்கா (அலோர் கஜா மற்றும் மத்திய மலாக்கா) ஆகியவையும் இந்த வானிலையை எதிர்கொள்ளும் என அது மேலும் கூறியுள்ளது.
அதேநேரம் சரவாக்கில், கூச்சிங், செரியான், சமரஹான், ஸ்ரீ அமான், பெடோங், சரிகேய், சிபு, மூக்கா மற்றும் கபிட் (சாங்) ஆகிய பகுதிகளும், சபாவில் தாவாவ், லஹாட் டத்து, கினாபடங்கான் மற்றும் சண்டக்கான் ஆகியா இடங்களிலும் இந்த இடியுடன் கூடிய மழை, கனமழை மற்றும் பலத்த காற்று வீசும் என்று மலேசிய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.





















