135 ஆண்டுகள் பழைமை வாய்ந்த செந்தூல் அருள்மிகு தண்டாயுதபாணி ஆலயத்தின் 7ஆவது மகா கும்பாபிஷேகம் நேற்று மிக விமரிசையாக நடந்தேறியது. பிள்ளையார் பட்டி சிவஸ்ரீ பிச்சை குருக்கள், ஆலயக் குருக்கள் தலைமையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ இந்த மகா கும்பாபிஷேகம் நடைபெற்றதாக ஆலயத்தின் காரியக்காரர் பி.எல். சிதம்பரம் கூறினார்.
கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து 48 நாட்கள் மண்டலாபிஷேகம் நடைபெறும் என்று ஆலயத்தின் கௌரவ செயலாளரும் பொருளாளருமாகிய மெய்யப்பன் மாணிக்கம் தெரிவித்தார்.









