காணாமல் போன 17 வயது சிறுமியைக் கண்டுபிடிக்க காவல்துறை பொதுமக்களின் உதவியை நாடுகிறது

ஈப்போ: ஜனவரி 26 முதல் காணாமல் போன 17 வயது சிறுமியைக் கண்டுபிடிக்க காவல்துறை பொதுமக்களின் உதவியை நாடுகிறது. டி புவனேஸ்வரி என்ற அந்த இளம்பெண், காணாமல் போவதற்கு முன்பு    தாமான் செமாரக்கில் உள்ள தனது வீட்டை விட்டு வெளியேறி தனது காதலனுடன் தங்க சென்றதாக போலீசார் நம்புகின்றனர்.

ஈப்போ ஓசிபிடி துணை ஆணையர் அபாங் ஜைனல் அபிடின் அபாங் அகமது கூறுகையில், சிறுமியைப் பற்றிய தகவல் தெரிந்தவர்கள் விசாரணை அதிகாரி  ரஃபிதா அப்துல் ரஷீத்தை 013-731 2477 அல்லது 05-245 1500 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.  அந்த இளம்பெண் இருக்கும் இடம் பற்றிய தகவல் தெரிந்தவர்கள்  அருகிலுள்ள காவல் நிலையத்தைத் தொடர்பு கொள்ளுமாறு அவர் செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 4) ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here