செர்டாங் மருத்துவமனை பார்க்கிங் சுவரில் HR-V கார் மோதி விபத்துக்குள்ளானது

செர்டாங் சுல்தான் இட்ரிஸ் ஷா மருத்துவமனையில் Honda HRV கார் ஒன்று இரண்டாம் மாடியில் உள்ள சுவரை மோதி, கீழே விழும் நிலையில் தொங்கியது. இந்த சம்பவத்தை நேரில் பார்த்த அல்மைஸா உமி Almaizah Umie என்பவர் தனது Facebook பதிவில் இந்த சம்பவத்தை பகிர்ந்ததைதொடர்ந்து அதன் காணொலி வைரலாகி வருகிறது.

“பார்க்கிங் தேடிக்கொண்டிருந்தபோது பலத்த சத்தம் கேட்டது. என்னவென்று தெரியவில்லை. பார்க்கிங் கிடைக்காததால் கீழே இறங்கினோம். அப்போது தான் இந்த சம்பவத்தை பார்த்தோம்” என்று அவர் குறிப்பிட்டார்.

அவரது Facebook பதிவு பகிர்வின் படி, இந்த சம்பவத்தில் யாருக்கும் எந்தக் காயமும் பாதிப்பும் ஏற்படவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here