பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவில் இன்று காலை 11 மணிக்கு பிரதமர் மோடி புனித நீராடுகிறார்.
அதிகாரிகள் வெளியிட்டுள்ள அட்டவணையின்படி, பிரதமர் மோடி காலை 10:00 மணிக்கு பிரயாக்ராஜ் விமான நிலையத்தில் தரையிறங்குவார், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் டில்லி பப்ளிக் பள்ளி மைதானத்தை அடைவார்.
காலை 11:00 மணி முதல் 11:30 மணி வரை, மோடி கும்பமேளா நிகழ்வில் கலந்து கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
144 ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் மஹா கும்ப மேளா, ஏற்கனவே நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் மற்றும் உலகம் முழுவதிலிருந்து கோடிக்கணக்கான பக்தர்களை ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.









